Trump vs India | இந்தியா வீசிய அடுத்த பிரம்மாஸ்திரம் - டிரம்பை வீழ்த்த புதிய ராஜதந்திர முடிவு

Update: 2025-08-12 06:51 GMT

அமெரிக்காவை வீழ்த்த 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா திட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்த நிலையில், 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அந்நிய செலாவணி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்புகளை சரி செய்ய 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் 90% உள்ளது. 20 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதாகவும் தற்போது அந்த யுத்தியில் மேலும் 30 நாடுகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்