Trump on Pm Modi | கட்டி ஐஸை தூக்கி தலையில் வைக்கும் டிரம்ப் - திடீரென ஏன் இந்த பேச்சு?
“என்ன ஆனாலும், மோடி எனக்கு ஒரு நல்ல நண்பர்“
பிரதமர் மோடியின்பால் தான் மிகவும் வருத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பொருட்கள் மீது, 50 சதவீதம் வரி செலுத்தியதால் நாம் இந்தியாவை இழந்துவிட்டோம் என வருத்தத்துடன் அவர் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகப்படியான எண்ணெய் வாங்குவதால், தான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், என்ன ஆனாலும் பிரதமர் மோடி தனக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.