இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இஸ்ரேலிய வழிகாட்டுதலுக்கு இணங்க, ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம், புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.