அமெரிக்காவின் மிசோரி Missouri மாகாணத்தில், வீசிய சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். செயின்ட் லூயிஸ் St. Louis நகரை சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சூறாவளி தாக்குதலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.