நடுவழியிலே நிறுத்தி திருப்பி அனுப்பிய அமெரிக்கா - இந்தியாவுக்கு பேரதிர்ச்சி
500 டன் கடல் உணவுகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா - பல கோடி இழப்பு
தூத்துக்குடியில் இருந்து 500 டன் இறால்களுடன் சென்ற கப்பலை, நடுவழியில் தடுத்து அமெரிக்க வணிகர்கள் திருப்பி அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு 600 கண்டெய்னர்களில் சுமார் 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. அமெரிக்காவில் விதித்த 50 சதவீதம் வரிவிதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்த சென்ற கடல் உணவுகளை டெலிவரி எடுக்க அமெரிக்க வணிகர்கள் முன்வராமல் திருப்பி அனுப்பினர். இதனால், கப்பல் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.