காஷ்மீர் தாக்குதலில் குலைநடுங்க வைக்கும் புதிய வாக்குமூலம்

Update: 2025-04-30 09:46 GMT

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர், தாக்குதலுக்கு முன்னதாக தன்னுடன் உரையாடியதாக சுற்றுலா பயணி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் காஷ்மீர் பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர்கள் இருவர் உட்பட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், பைசரண் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள உணவகத்தில் தன்னிடம் பேசியதாக மகாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்