Sheikh Hasina | ஷேக் ஹசீனா விவகாரம் - இந்திய தூதருக்கு கண்டனம்

Update: 2025-11-13 09:20 GMT

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், ஊடகத்துக்கு அவர் பேட்டியளித்தது தொடர்பாக இந்திய தூதருக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தனக்கு எதிராக போராட்டம் வெடித்ததால், ஷேக் ஹசீனா பதவியைத் துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் அண்மையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்ததால், இந்திய தூதர் பவன் பதேவை வங்கதேச அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததுடன், ஷேக் ஹசீனா ஊடகத்தைத் தொடர்புகொள்ள கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்