ஈஸ்டர் பண்டிகையில் கூட விட்டு வைக்காத புதின் - கதிகலங்கிய நாடு

Update: 2025-04-20 10:57 GMT

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புதின் 30 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த நிலையில், தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். தற்காலிக போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஜெலன்ஸ்கி முன்னதாக வலியுறுத்திய நிலையில், ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்