White House | Trump | வெள்ளை மாளிகையில் நிலைகுலைந்த அதிர்ச்சி - 1 நொடி டிரம்ப் பதறிய காட்சி
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் டிரம்ப்பின் பின்னால் நின்றிருந்த மருந்து நிறுவன பிரதிநிதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடல்எடை குறைக்கும் மருந்தின் விலையை குறைப்பது தொடர்பாக அறிவிக்கும் இந்த நிகழ்வில், மருந்து நிறுவன பிரதிநிதி திடீரென மயங்கி விழுந்தார். உடனே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அவர் நலமாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.