பழிவெறியின் உச்சம் - இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் அதிர்ச்சி அறிவிப்பு
இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
ரஷ்யாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியை தொடர்ந்தால் இந்தியா மேலும் தடைகளை சந்திக்க நேரிடும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யும் நிலையில், இந்தியாவுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட தடைகளும் விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், சீனாவை தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம் நிலை தடைகளை விதித்தது ஒரு நடவடிக்கை இல்லையா? என்று பதில் வினா எழுப்பினார். இது ரஷ்யாவுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இழப்பை ஏற்படுத்தியுள்ளது....இது ரஷ்யா மீதான நேரடி நடவடிக்கைதான்... அவ்வாறு இருக்க, ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று எப்படி கூறுவீர்கள்? என்றும் அதிபர் டிரம்ப் வினவினார். ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்தால், இந்தியா மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.