Pakistan |Army|``4 லட்சம் பெண்களை கொடூரமாக சீரழித்த பாக். ராணுவம்''-உலகையே திருப்பி போட்ட அதிர்ச்சி
பாகிஸ்தான் ராணுவம் தங்கள் சொந்த நாட்டு பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஐ.நா.வில் இந்திய தூதர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பெண்களின் நிலை தொடர்பாக விவாதம் நடைபெற்றபோது இந்தியா மீது பாகிஸ்தான் தூதர் சைமா சலீம் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
காஷ்மீரில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாக எவ்வித ஆதாரமுமின்றி அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ், பெண்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் செயல்பாடு கலங்கமில்லாதது என்றும்,
தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுமழை பொழிந்து கொன்று ஒழித்த ஒரு நாடு, இந்தியாவின் மீது குற்றம்சாட்டுவது வேடிக்கையாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும், கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலை போரின்போது அன்றைய ஒன்றுபட்ட கிழக்கு பாகிஸ்தானில்,
ஆபரேஷன் செர்ச்லைட் என்ற பெயரில் வங்கமொழி பேசக்கூடிய சுமார் 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததையும் பர்வதனேனி ஹரிஷ் நினைவுகூர்ந்தார்