Nukes |Putin | ஆழ்கடலில் அரக்கனை இறக்கிய புடின்.. பதற்றத்தில் உலகம்
ஆழ்கடலில் அதிநவீன அணுசக்தி டிரோன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் ராணுவ மருத்துவமனையைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், ரஷ்யாவிடம் மட்டுமே ஆழ்கடலில் தாக்கக்கூடிய அணுசக்தி டிரோன் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த டிரோன், இலக்கைக் குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. 20 மீட்டர் நீளமும், 100 டன் எடையும் கொண்ட அந்த டிரோன், நீருக்கடியில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன்வாய்ந்தது என்றும், 1,000 மீட்டர் ஆழத்தில் இயங்கக்கூடியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.