Nepal Protest | Air India Express Flight | ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தால், அந்நாட்டிற்குச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முக்கிய அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்திற்கு செல்லும் பயணிகள், விரும்பினால் கட்டணமின்றி தங்கள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பயணத்தை ரத்து செய்ய விரும்பினாலும், முழு கட்டணத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.