Nepal | nepal gen z protest | நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்பு

Update: 2025-09-13 01:59 GMT

Nepal | nepal gen z protest | நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி பதவி ஏற்றுக்கொண்டார். ஊழலுக்கு எதிரான ஜென் 'Z' தலைமுறையினரின் போராட்டத்தால் பற்றி எரிந்த நேபாளத்தில் பிரதமர் ராஜினாமா செய்ததை அடுத்து, அமைச்சர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்த நிலையில், நேபாளத்தை வழிநடத்த இடைக்கால பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து 'ஜென் Z' தலைமுறையினருடன் ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் , அவர்களது ஆதரவு பெற்ற சுசிலா கார்க்கி , நேபாள அதிபர் ராமசந்திர பவுடேல் முன்னிலையில் நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்