Kashmir Attack தேடி தேடி வேட்டை...காஷ்மீரில் சிதறும் பயங்கரவாதிகளின் வீடுகள்-கருவறுக்கும் இந்திய படை

Update: 2025-04-27 11:20 GMT

தேடி தேடி வேட்டை... காஷ்மீரில் சிதறும் பயங்கரவாதிகளின் வீடுகள் - கருவறுக்கும் இந்திய பட காஷ்மீரில் மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டன. பஹல்காம் ​தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா, அனந்த்நாக் பகுதிகளில் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த அடில் உசேன் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரது வீடுகள் ஏற்கனவே தகர்க்கப்பட்டன. இந்நிலையில், ஷோபியன் பகுதியில் ஷாகித் அகமது, குல்காம் பகுதியில் ஜாகீர் ஆகியோரது வீடுகளும், புல்வாமாவில் உள்ள முரன் பகுதியில் அசன்-உல்-ஹக் ஷேக், குப்வாராவில் ஃபரூக் டீவ்டா ஆகியோரது வீடுக​ளும் தகர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்