Iran Vs Israel | Ali Khamenei | முடிவை அறிவித்தார் கமேனி - ஆடிப்போன உலகம்
யாருடைய தாக்குதலுக்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் சுப்ரீம் லீடர் கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் யாரையும் தாக்கவில்லை என்றும், தங்கள் மீதான தாக்குதலை ஏற்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு வழங்கும் ஒத்துழைப்பை ரத்து செய்ய, ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.