Canada | Delhi car blast | நடுங்க வைத்த டெல்லி பயங்கரம்.. வருத்தம் தெரிவித்த கனடா!

Update: 2025-11-13 06:21 GMT

அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். இந்த ஆண்டு இரு நாட்டு அமைச்சர்களும் மூன்றாவது முறை சந்தித்து இந்த பேச்சுவார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது, டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு கனடா வெளியுறவு அமைச்சர் கவலை தெரிவித்தார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே சட்ட அமலாக்க ஒத்துழைப்பு தொடர்பாகவும் , எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்