உக்ரைன், ரஷ்யா போர் 3ஆம் உலக போரில் தான் முடியும் என டிரம்ப் வேதனை
ரஷ்யா - உக்ரைன் போரில் கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்...உக்ரைன், ரஷ்யா போரானது கடைசியில் மூன்றாம் உலகப்போரில் தான் போய் நிற்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா போரில் கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் என்றும் கவலை தெரிவித்தார். போரை நிறுத்த அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவதாக கூறிய டிரம்ப்,
இதே நிலை நீடித்தால், 3-ஆம் உலகப் போருக்கு தான் வழிவகுக்கும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.