8 பணயக் கைதிகளுக்கு இன்று விடுதலை - ஹமாஸ் வெளியிட்ட லிஸ்ட் | Israel | Hamas | Thailand | Thanthi TV

Update: 2025-01-30 09:58 GMT

இஸ்ரேலியர்கள் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பணயக் கைதிகள் 8 பேரை ஹமாஸ் அமைப்பு இன்று விடுதலை செய்ய உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த‌ப்படி, அடுத்தக்கட்ட பணயக் கைதிகள் விடுவிப்பை ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலிய ராணுவ வீர‌ர் உட்பட 3 பேர், தாய்லாந்தை சேர்ந்த 5 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தங்களது உறவுகளின் பெயர் இருப்பதைக் கண்டு, ஜெருசலேமில் போராட்டம் நடத்தி வந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்