Israel | Gaza | உள்ளே புகுந்து 111 பேரை கொன்ற இஸ்ரேல் - மரண ஓலம் கேட்டு நடுங்கும் உலகம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று ஒரே நாளில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பணயகள் கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை, தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில், நேற்று ஒரே நாளில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்தவர்கள் 29 பேர் உட்பட 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை, உணவுப் பொருட்களுக்காக கூடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 640 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 ஆயிரத்து 488 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, 6 ஆயிரத்து 454 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 22 ஆயிரத்து 551 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்மூலம் காசாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது.