அமெரிக்காவின் யூட்டாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் கட்டிடம் மற்றும் சுற்றுவட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் மற்றும் உள்ளூர் சமுதாயத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.