gen z protest | அடுத்தடுத்து வெடிக்கும் GEN Z போராட்டம் - போர்க்களமாக மாறிய இன்னொரு நாடு

Update: 2025-10-12 08:18 GMT

அடுத்தடுத்து வெடிக்கும் GEN Z போராட்டம் - போர்க்களமாக மாறிய இன்னொரு நாடு

நேபாளம், கென்யாவைத் தொடர்ந்து மடகாஸ்கர் நாட்டிலும் ஜென்-Z தலைமுறையினரின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து உருவான போராட்டம், தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. தலைநகர் அன்டனநாரிவோவில் (ANTANA NARIVO) ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்களை தடுத்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டை வீசி விரட்டினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் போலீசார் மீது கற்களை வீசியதால் கலவர பூமியாக காட்சியளித்த‌து.

Tags:    

மேலும் செய்திகள்