3வது டெஸ்ட் - இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் தேர்வு
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஷ் டங்கிற்கு Josh Tongue பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் JOFRA ARCHER அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக இதே லார்ட்ஸ் மைதானத்தில் 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த ஆர்ச்சர், 4 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.