Donald Trump | Nobel Prize | மிஸ்ஸான நோபல் பரிசு - முதல்முறை மனதில் உள்ளதை உலகிற்கே சொன்ன டிரம்ப்

Update: 2025-10-11 09:26 GMT

நோபல் பரிசைப் பெற்றதும் தன்னை அழைத்து பேசிய மரியா கொரினா மச்சாடோ, தனக்கு மரியாதை செலுத்தும் விதமாக நோபல் பரிசை ஏற்பதாகவும்,

நோபல் பரிசுக்கு, தான் உண்மையிலேயே தகுதியானவர் என்று கூறியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

"நோபல் பரிசை எனக்குக் கொடுங்கள் என்று சொல்லவில்லை.... மரியா கூறியிருக்கலாம் என்று தான் நினைத்தேன்"

"அவருக்கு நான் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன்" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதால், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நோபல் கமிட்டி அமைதியை விட அரசியலை முன்னிறுத்துவதாக வெள்ளை மாளிகை விமர்சித்த நிலையில், டிரம்ப் இதுபோன்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்