300 நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை - உலகையே அதிர வைத்த டாக்டர் | France | Doctor | Crime
பிரெஞ்சு முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தன்னிடம் வந்த கிட்டத்தட்ட 300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தனது மகனின் நண்பர்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலானோர் 15 வயதிற்கும் குறைவான சிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Vannes நகரைச் சேர்ந்த Joel Le Scouarnec என்ற அந்த 74 வயது மருத்துவர் அறுவை சிகிச்சை முடிந்து மயக்க நிலையில் இருக்கும்போது தனது நோயாளிகளிடம் எல்லை மீறியுள்ளார். இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஜோயெல் குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்...