எலான் மஸ்கின் நிறுவனங்களை அழிக்க முயற்சி ? - மறுத்த டிரம்ப்
உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான எலான் மஸ்கின் வணிக நிறுவனங்கள் மேலும் செழிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவருக்கும் எலான் மஸ்க்குக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில்
மஸ்கின் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கும் மானியங்களை ரத்து செய்து அவரது நிறுவனங்களை நான் அழிப்பேன் என்று பலரும் கூறி வருவதாக குறிப்பிட்டு, அதனை மறுத்துள்ளார். எலான் மஸ்க்கும், அமெரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் செழிக்கவே தாம் விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.