Sheikh Hasina Verdict | ``யாரும் விதிவிலக்கு அல்ல’’ - உலகையே அதிரவிட்ட `மரண தண்டனை’ தீர்ப்பு
சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்று, வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த எழுச்சி தொடர்பான வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்ற அடிப்படை கொள்கையை உறுதிப்படுத்தி உள்ளது என்றார்.
போராட்டக்காரர்களை தாக்குவதற்கு உத்தரவிட்டவர்கள், தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நீதிமன்றத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை அங்கீகரிப்பதாகவும், நீதி அமைப்பின் பொறுப்புணர்வை நிலைநாட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.