அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பொருட்கள் மீது 104 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது 84 சதவீதம் சீனா வரி விதித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிக்கு எதிராக சீன அரசு பதிலடி கொடுத்திருந்த நிலையில், உடனடியாக தனது வரிவிதிப்பை சீனா திரும்பப் பெற வேண்டும் என டிரம்ப் கெடு விதித்திருந்தார். இருந்தும் பின் வாங்காத சீனா , தற்போது தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது.