கள் குடித்தவர்களுக்கு இரத்த வாந்தி - 3 பேர் பரிதாப பலி.. தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் குகட்பள்ளி (Kukatpally) என்ற பகுதியில் கள் குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் விற்ற கள்ளை, சுமார் 15-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்த நிலையில், அவர்களுக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய ரத்த வாந்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (Nizam's Institute Of Medical Sciences) மாற்றப்பட்டு அங்கு சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து பேசிய தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்ஹா(Damodar Raja Narasimha), பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொர்பாக விசாரணை நடத்தி வருதாகவும் தெரிவித்து உள்ளார்.