Anthony Joshua | நூலிழையில் உயிர் தப்பிய குத்துச்சண்டை வீரர் அந்தோணி ஜோஷுவா - திக் திக் காட்சி
நைஜீரியாவில் நிகழ்ந்த கோர விபத்தில் குத்துச் சண்டை வீரர் அந்தோணி ஜோஷுவா காயங்களுடன் உயிர் தப்பினார்.
நைஜீரியாவில் உள்ள ஓகுன்-லாகோஸ் நெடுஞ்சாலையில், அவர் பயணம் செய்த சொகுசு கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 2 பேர் உயிரிழந்த நிலையில், அந்தோணி ஜோஷுவா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.