அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கையில் காயம் உள்ளதாகக் கூறி பல நாள்களாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன. டிரம்ப்பின் வலது கையில் உள்ள காயத்தை மறைக்க மேக் அப் போடப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் பரவி வரும் நிலையில், 79 வயது டிரம்ப்பின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் இந்த யூகங்களை மறுத்துள்ள வெள்ளை மாளிகை... தொடர்ச்சியாக கை குலுக்குவதினால் ஏற்பட்ட சிராய்ப்பு என விளக்கமளித்துள்ளது.