காசாவில் பேரழிவு நீடிப்பதாக 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கவலை
காசாவின் மனிதாபிமான நிலைமை மீண்டும் மோசமடைந்து வருவதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது "பேரழிவாக" நீடிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். போர்நிறுத்தத்திற்கு பிறகு பஞ்சம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், சுமார் 1.6 மில்லியன் மக்கள் இன்னும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர். சில சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதால், சுகாதாரச் சேவைகள் மேலும் பாதிக்கப்படும் என்று அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.