ஏமனிலிருந்து தனது படைகளை திரும்ப பெற்றது யூஏஇ
ஐக்கிய அரபு அமீரகம் ஏமனிலிருந்து தனது படைகளை முழுமையாக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. ஏமனில் நிலவி வரும் தொடர் உள்நாட்டு போர், அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அங்கிருக்கும் தனது அனைத்து ராணுவ படைகளையும் வெளியேற்றுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியா, ஏமன் அரசு விடுத்த 24 மணி நேர கெடுவை தொடர்ந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏமனில் நிலவி வரும் குழப்பமான சூழலில் இருந்து விலகி, பிராந்திய ஸ்திரத்தன்மையை பேண இத்தைகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்த ராணுவ நகர்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Next Story
