Netanyahu | உலகையே திரும்பவைத்த வெள்ளை மாளிகை மீட்டிங் - அப்படி என்னதான் சொன்னார் நெதன்யாகு?
வெள்ளை மாளிகையில் டிரம்பை போல ஒரு நண்பரை பார்த்ததில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாக புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருவரும் சந்தித்து 2-ஆம் கட்ட காசா அமைதி திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது இக்கட்டான தருணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தோளோடு தோள் நின்று உதவியதாக நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார்.