Africa GenZ Protest | ராணுவம் எடுத்த முடிவால் அதிர்ச்சி - நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?
மொராக்கோ, கென்யா மற்றும் நேபாளத்தை தொடர்ந்து 'ஜென் Z' போராட்டக்காரர்களால் ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரிலும் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு தனது அரசை கலைப்பதாக அறிவித்திருந்த அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகரில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்ட நிலையில், ராணுவத்தின் ஒரு பிரிவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.