அரிசோனாவை தாக்கிய பிரம்மாண்ட புழுதி புயல்
ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை போல், அமெரிக்காவின் அரிசோனா நகரத்தை பிரம்மாண்ட புழுதி புயல் ஒன்று தாக்கியது... “ஹபூப்“ HABOOB என்ற இந்த புழுதி புயல், நகர் முழுவதையும் தாக்கியது. சுமார் 50 அடி உயரத்தில், 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த புழுதி புயலால், இரவில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, புழுதி புயல் கடந்து செல்ல காத்திருந்தனர்.