பன்னிரெண்டாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய நிர்வாகிகள் வி.ஆர்.எஸ் சம்பத், டாக்டர் ராஜன் நடராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோர், இந்திய, அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவதற்கு தமிழர்கள் பாலமாக நிற்கும் முயற்சி, இந்த மாநாடு என்று தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை நிலை ஆளுநர் அருணா மில்லர், மேரிலாந்து அமைச்சர் சூசன் லி, வர்ஜீனியா மாகாண உறுப்பினர் கண்ணன் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இந்தியா, அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவின் மிகப்பெரிய திருப்புமுனை இந்த மாநாடு என்று பாராட்டினர்.