உத்தரப்பிரதேசத்தில், இளைஞர் கடித்ததில் நச்சுத்தன்மை வாய்ந்த கருநாகப்பாம்பு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பதாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் புனித் என்பவர் வயலில் வேலை பார்த்தபோது, அவரது காலைச் சுற்றிய கருநாகப்பாம்பு, அவரை காலில் கடித்துள்ளது. எனினும் அதைக் கண்டு அஞ்சாத அந்த இளைஞர், பாம்பை கையில் பிடித்து அதன் தலையை பற்களால் கடித்துள்ளார். இதில் அந்த பாம்பு இறந்தது. இச்சம்பவத்தில் இளைஞர் எந்த ஆபத்தும் இன்றி உயிர்பிழைத்ததால் கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்