Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் நடைபெற உள்ளது...இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது...
- திருவனந்தபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாஜக பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வாழ்த்தியுள்ளார்...தனது சொந்த தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றதாகவும், ஆனால் மக்கள் மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...
- கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி மீதான நம்பிக்கை வளர்ந்துள்ளதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவு காட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரசின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுப்பதாகவும் கூறியுள்ளார்...
- கொல்கத்தாவில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து, மும்பையில் மெஸ்ஸியின் நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன...
- தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி இன்றுடன் முடிவடைகிறது...வரும் வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....