Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12.09.2025) | 9 AM Headlines | ThanthiTV

Update: 2025-09-12 04:13 GMT
  • ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
  • திருச்சி உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களில், விரைவு குடியுரிமை வசதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்...
  • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான PF பணத்தை, ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி...
  • யுபிஐ பண பரிவர்த்தனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுக்கு, ஒரு நாளைக்கான உச்ச வரம்பு பத்து லட்ச ரூபாயாக உயர்கிறது...
  • மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வேன் ஏறியதில் 8 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்...
  • குன்னூர் சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது...
  • இந்தியாவின் முன்னணி எல்க்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்..
  • விஐபிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல் காந்தி தொடர்ந்து மீறுவதாக சிஆர்பிஎப் குற்றம்சாட்டியுள்ளது..
  • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற சில எம்பிக்களுக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது...
  • குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை10 மணியளவில் பதவியேற்கிறார்......

Tags:    

மேலும் செய்திகள்