Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.12.2025)| 6 AM Headlines | ThanthiTV
ஆரவல்லி மலைத்தொடர் எல்லை வரையறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது....உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆயிரம் உழவர்கள் நல சேவை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்....திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர், அரங்குகளையும் பார்வையிட்டார்...
திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...100 நாள் வேலை திட்டத்தை சிதைத்த பாஜகவுக்கு, அதிமுக ஆதரவு அளித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இன்று மீண்டும் தமது பரப்புரையை தொடங்குகிறார்...திருப்போரூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்....வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன...
தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், மிக பிரமாண்டமாக நடைபெற்றது.....மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட நிகழ்வு என்று, Malaysian Books Or Records-ல் இந்த விழா இடம்பிடித்துள்ளது...
33 ஆண்டுகளாக தமக்காக நின்ற ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுத்துள்ளதாக விஜய் பேசியுள்ளார்....அடுத்த 33 ஆண்டுகளுக்கு ரசிகர்களுக்கு துணை நிற்பேன் என்றும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்துள்ளார்.....
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, சஸ்பென்ஸ் இருந்ததால் தான் கிக் இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்....2026-ல் வரலாறு மீண்டும் திரும்புகிறது.... அதனை ஆரத்தழுவி கொண்டாட தயாராவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
நண்பர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ, வலுவான எதிரி இருக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்....சும்மா வருபவர்களை எல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
அன்புமணி பக்கம் இருப்பவர்கள் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்..இதுவே எனது கடைசி யுத்தம் என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்...
பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 வாரங்களில் தெரிவிக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்...பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து போகப்போக தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன....இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் இல்லை என்று விமர்சித்த சீமான், நா.த.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கப்படும் என்று நகைச்சுவையாக கூறினார்...