Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.12.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-12-12 00:57 GMT
  • ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று படையப்பா படம் ரீ ரிலீசாகிறது...தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
  • இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது...51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் 1-1 என்ற கணக்கில் இருஅணிகளும் சம நிலையில் உள்ளன...
  • சபரிமலைக்கு மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்...மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர்...
  • விஜய்யின் தலைமையை ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என சென்னை, பனையூரில் நடந்த தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்...தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உட்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது...
  • ஈரோட்டில் வரும்18ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள இடம் விஜயாபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது...அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் நடத்த அனுமதிக்கக்கூடாது என ஈரோடு ஆட்சியருக்கு கோயில் செயல் அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்