Airport Fire Accident | சென்னை விமான நிலைய தீ விபத்து - இதுதான் காரணமா? வெளியான புது தகவல்

Update: 2026-01-29 15:40 GMT

சென்னை விமான நிலைய தீ விபத்து - இதுதான் காரணமா? வெளியான புது தகவல்

சென்னை விமான நிலைய தீவிபத்திற்கு அங்கு கண்டேடுத்த, பவர்பேங்க் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.”

நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 2வது பன்னாட்டு முனையத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புறப்பாடு போர்டிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலைய தீயணைப்பு துறையினரால் முதற்கட்ட தடயமாக, பயணிகளிடம் பரிமுதல் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட பவர் பேங்க்குகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது கைப்பற்றப்பட்ட மின்சாதனங்களில் மின்கசிவு ஏற்பட்டதா என்பதைக் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்