Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.01.2026) | 6AM Headlines | ThanthiTV

Update: 2026-01-09 01:00 GMT
  • தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது...முதற்கட்டமாக, சிறப்பு பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்பட உள்ளன...
  • 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்...2 கோடியே 22 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.....
  • தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது...அரிசி குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன்களை காட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பெற்றுச் சென்றனர்...
  • விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு..இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்...
  • விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு இயக்குநர்கள் வெங்கட்பிரபு, அமீர், கார்த்திக் சுப்புராஜ், அஜெய் ஞானமுத்து உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்...அதே போல் நடிகர்கள் சிம்பு, ரவிமோகன், சாந்தனு உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்...
  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...டெல்டா மாவட்டங்களில் காலை முதல் மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • திருவாரூர், நாகையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
  • மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
  • தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், ஒடிசா, டெல்லியை போல தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என்ற அமித்ஷாவின் டார்கெட் நடக்காது என கூறினார்..
  • சென்னையில் 49வது புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...ஆயிரம் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சி, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது...
  • புத்தக கண்காட்சியில் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை பாராட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...தமிழகத்தில் மட்டும்தான் புத்தக கண்காட்சிக்கு நிரந்தர இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிவுக்கான தீ பரவட்டும் என்றும் கூறினார்...
Tags:    

மேலும் செய்திகள்