Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.01.2026) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2026-01-02 01:02 GMT
  • 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவித்துள்ளார்.சுமார் 183 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர்.
  • ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது....அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்....
  • சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்...100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்...
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குடும்பத் தகராறில் பெண் வி.ஏ.ஓ. விஷமருந்தி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்...மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலை ஏற்காமல், குடும்பத்தினரே விஷம் கொடுத்து கொன்று விட்டதாக அப்பெண்ணின் ஆண் நண்பர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
  • நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது....சமீபத்தில் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்