Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.01.2026) | 11 AM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது...இதுவரை 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்...
- பொங்கல் விழா முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக நெல்லை - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது...நெல்லையில் இருந்து மதியம் ஒரு மணிக்கு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
- பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- தமிழகம் முழுவதும் தை அமாவாசை தினத்தையொட்டி மக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி வருகின்றனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
- டெல்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் இயக்கம் தாமதமாகியுள்ளது.டெல்லி விமான நிலைய ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனியால் சூழ்ந்துள்ளது.
- தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.