Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.01.2026) | 1PM Headlines | ThanthiTV
- பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் திரும்பி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்துள்ளன.
- தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது...இதுவரை 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்...
- மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது என அசாமில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்...காங்கிரஸ் கட்சியிடம் வளர்ச்சிக்கான செயல்திட்டம் எதுவும் இல்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்...
- புத்தக வாசிப்பால் அறிவுத்தீ பரவ வேண்டும் என சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர்வதேச புத்தக கண்காட்சி அறிவு பரிமாற்ற நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை தவெக தலைவர் விஜய் மீண்டும் டெல்லி செல்லவுள்ளார்.டெல்லியில் நாளை சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகிறார்....