Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.01.2026) | 1PM Headlines | ThanthiTV

Update: 2026-01-03 08:13 GMT
  • 'TAMILNADU ASSURED PENSION SCHEME' என்ற பெயரில் புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு தொகை மற்றும் அரசினுடைய பங்களிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
  • பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கு நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.ஜனவரி 8ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
  • தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது...வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ‌ சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது...
  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.மீனவர்களின் 2 நாட்டு படகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்து வருகிறது.நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி தாயாருக்கும் மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை காட்டப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
  • தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்த‌து....குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க 2 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • டெல்லி பிதோரா கலாசார வளாகத்தில் சர்வதேச புத்தர் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.கண்காட்சி வளாகத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.புத்தர் கண்காட்சி வளாகத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன, வண்ணமயமான உடைகள் அணிந்து கலைஞர்கள் நடனமாடினர்.
Tags:    

மேலும் செய்திகள்