IPL2026 | வங்கதேச கலவரம் - அந்நாட்டு வீரரை அதிரடியாக நீக்கிய கொல்கத்தா அணி

Update: 2026-01-03 15:00 GMT

பிசிசிஐ அறிவுறுத்தலின்படி, ஐபிஎல்லில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டுள்ளார்.

அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தா அணியில் அந்நாட்டு வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இடம்பெற்றதை பலர் கடுமையாக விமர்சித்தனர். அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராகவும் இணையத்தில் சில கருத்துகள் பதிவிடப்பட்ட நிலையில், பிசிசிஐ அறிவுறுத்தலின்பேரில் ரஹ்மானை விடுவித்ததாக கே.கே.ஆர் கூறியுள்ளது.

இதையடுத்து, முஸ்தபிசுருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கொல்கத்தா அணி இணையத்தில் பதிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்