மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை இந்தியா வீராங்கனை தீப்தி சர்மா படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட்டை (Megan Schutt) முந்தி,151 விக்கெட்டுகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற தனித்துவமான பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 5வது டி20 போட்டியின் போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.